அமெரிகா அரிசோனா மாநிலத்தை சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகனின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
அமெரிக்கா அரிசோனா மாகாணத்தின் ப்ரெஸ் காட் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஸ்டேன்பீல்டு தாமஸ் (35). இவரும் இவரது 4 வயது இளைய மகனும் தனது நண்பருடைய வீட்டிற்கு சென்று இருந்தனர்.
அப்போது, நண்பர் வீட்டின் ஒரு அறைக்கு சென்ற அந்த 4 வயது பையன், அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து எதிர்பார விதமாக சுட்டு இருக்கிறான். இதில் தாமஸ் மீது குண்டு பாய்ந்து இருக்கிறது.
படுகாயமடைந்த அவரை நண்பர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்று இருக்கிறார். ஆனால் மருத்துவர்கள் தாமஸ் முன்னரே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சிறுவன் தனது தாயுடன் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.