Search

13வது திருத்தச் சட்டத்தில் 5 மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி தயார்!

13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய ஐந்து கட்டாய மாற்றங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த 5 பரிந்துரைகளில் இரண்டு அமைச்சரவையில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதிகள் குழு ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது.

இதன் போது குறித்து ஐந்து பரிந்துரைகள் தொடர்பிலும் விவாதிக்கப்பட்டன.

அவற்றில் இரண்டு பரிந்துரைகளை அமைச்சரவையின் அனுமதிக்காக முன் வைப்பதாக, ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாக ஹெல உறுமயவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த பரிந்துரைகள் குறித்த தகவல்களை அவர் வழங்கவில்லை.

 

13ஆம் திருத்தச் சட்டத்தில் 5 மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி தயார்!

13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய ஐந்து கட்டாய மாற்றங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர்களினால் 13ம் திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் நேற்று (10) மாலை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஐந்து மாற்றங்களில் இரண்டு அமைச்சரவையில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஏனைய மூன்று மாற்றங்களும் உடனடியாக பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு முன்வைப்பதாக ஜாதிக ஹெல உறுமய தலைவர்களிடம் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடைபெறும்போது அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மனசாட்சிக்கு ஏற்ப செயற்படுவதற்கு இடமளிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று (11) ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *