வல்வெட்டி T-10 தொடர்
தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது வல்வை அணி
வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழகமானது அழைக்கப்பட்ட கழகங்களிற்கிடையிலான அணிக்கு 11 நபர் கொண்ட 10 பந்துபரிமாற்றம் கொண்ட லீக் முறையிலான தொடரொன்றை நடாத்தி வருகின்றது. அந்தவகையில் நேன்றைய தினம் (07/04/2023) தனது முதலாவது லீக் போட்டியில் வல்வை அணியானது அல்வாய் யூத் அணியினை எதிர்கொண்டது. நாணயற்சுழற்சியில் வெற்றி பெற்ற வல்வை அணியானது முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய வல்வை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துபரிமாற்றம் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 83 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு 84 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அல்வாய் யூத் அணியானது 10 பந்துபரிமாற்றம் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 51 ஓட்டங்களை மாத்திம் பெற்றுக்கொண்டது.
VALVAI 83-8
Batting
Pragatheesvaran :- 34 (18) ( 56 , 14 )
Ruthesa :- 26 (20 ) ( 26 ,14)
ALVAI YOUTH 51-10
Bowling
Sivathushan :- 5-3 (2)
Ranjith :- 16-3(2)
Kabilan :- 3-2(2)
Mayooran :- 16-1(2)
Tharshan :- 9-0 (2)
VALVAI WON BY 32 RUNS
போட்டியில் வெற்றி பெற்றது வல்வை அணி.