வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மணிவிழாவை முன்னிட்டு நடத்தும் கரப்பந்தாட்டச் சுற்றுத்தொடர் இன்று 12.06.2013ல் வல்வை நெடியகாடு சிற்றம்பலப்பிள்ளையார் ஆலய வீதியில் மின்னொளியில் 8.30 பி.ப மணியளவில் ஆரம்பமாகின. முதலாவது போட்டியாக வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர் விவேகானந்தா விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று ஆரையிறுதி ஆட்டத்திற்கு தெரிவாகின. இரண்டாவது சுற்றில் அண்ணா விளையாட்டுக்கழகத்தை எதிர் நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.இதில் நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகம்வெற்றிபெற்று ஆரையிறுதி ஆட்டத்திற்கு தெரிவாகின. தெரிவாகிய இவ்விரு அணிகளும் ஆரையிறுதி ஆட்டத்தி எதிர்த்து விளையாடி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகம் 25:21 வெற்றிபெற்று. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.அத்துடன் இன்றைய போட்டிகள் யாவும் நிறைவுபெற்றன .