பிரிட்டனை சேர்ந்த “ராஸ்பரி பை பவுன்டேஷன்” எனும் நிறுவனம் நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட உலகிலேயே மிக மலிவான கணனியை வடிவமைத்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக, மலிவு விலை கணனி தயாரிப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.
இதன் பயனாக, 1,400 ரூபாய் விலையில் அதிநவீன தொழில் நுட்பத்திலான மலிவு விலை கணனியை வடிவமைத்ததுள்ளது.
முதலில ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே சந்தைப்படுத்தப்பட்ட இந்த கணனி கடந்த வாரம் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளிலும் தற்போது அமெரிக்காவிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
மிகக் குறைந்த விலையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கணனி 1750 ஹெட்ஸ் பிராஸசர், 256 மெகாபைட் ராம், 2.0 யு.எஸ்.பி. போர்ட், எச்.டி.எம்.ஐ., போர்ட், 1/8 ஆடியோ அவுட்புட், எச்.டி., வீடியோ கேமரா, எஸ்.டி., மெமரி கார்டு உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
மேலும் இதனுள் லினக்ஸ் கணனி மொழியில் இதற்கான ஆபரேடிங் சிஸ்டம் எழுதப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவில் இக் கணனிகள் அறிமுகம் செய்யப்பட்ட குறுகிய காலத்திலேயே அனைத்து நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை