பொது இடங்களில் ஏற்படும் தீ விபத்துக்களின் போது தீயணைப்பு வீரர்களுக்கு உதவக் கூடிய அதிநவீன ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட Firefighting Robot(FFR) எனப்படும் இந்த ரோபோவானது மனிதர்களால் தாங்க முடியாத வெப்ப சக்தியை தாங்கக்கூடியதாகக் காணப்படுகின்றது.
மேலும் முப்பரிமாண வீடியோ பதிவுகளை செய்யக்கூடிய வகையில் 3 கமெராக்களைக் கொண்டுள்ள இந்த ரோபோவானது, இரண்டு சில்லுகளை மட்டுமே கொண்டுள்ளதுடன் அவற்றிற்கு மத்தியில் காணப்படும் லிப்ட் மூலம் படிகளிலும் சுயமாகவே பாய்ந்து ஏறும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
|