வடக்கில் அதிகாரப் பகிர்வு வேண்டும் – நியூசிலாந்து!

வடக்கில் அதிகாரப் பகிர்வு வேண்டும் – நியூசிலாந்து!

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் ஊடாக இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிட சர்வதேச சமூகத்திற்கு சந்தர்ப்பம் கிட்டும் என நியூசிலாந்து அறிவித்துள்ளது. மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேரடியாக பார்வையிட முடியும் என நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் முரே மெக்யுலி தெரிவித்துள்ளார்.

வடக்கில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் திருப்தி அடையக் கூடிய தீர்வுத் திட்டங்கள் இன்மும் முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செப்டம்பர் மாதம் வட மாகாணசபை தேர்தல் நடத்துவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

கடந்த வாரம் இலங்கை வந்த நியூசிலந்து பிரதமர் இலங்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களான பீரிஸ், பசில் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.