போராளிகளுக்கு உதவி செய்வோம்: சிரியா ஜனாதிபதிக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

போராளிகளுக்கு உதவி செய்வோம்: சிரியா ஜனாதிபதிக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த ஜனாதிபதி ஆசாத் ஆட்சிக்கு எதிராக சன்னி மற்றும் கிறுஸ்தவ போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் சண்டைக்கு அங்கு இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. அதிகாரி நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.

அலெப்போ நகரை போராளிகளிடமிருந்து கைப்பற்ற ஜனாதிபதி படை தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. இதில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பொதுமக்கள் 150 பேரை ஜனாதிபதி படையினர் கொன்றுவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதனையடுத்து போராளிகளுக்கு முன்னறிவிப்பின்றி ஆயுதங்கள் வழங்கி உதவிட ஜனாதிபதி பராக் ஒபாமா முடிவு எடுத்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

ஜனாதிபதி படை இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது உறுதியாகியுள்ளதால் போராளிகளுக்கு அதுபோன்று இரசாயன ஆயுதங்கள் வழங்கப்படும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

லெபனான் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும், ஈரானும் சிரியாவிற்கு உதவுவதால் அமெரிக்கா இந்த மிரட்டலை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.