இயக்குனர் மணிவண்ணன் இயற்கை எய்தினார்!

இயக்குனர் மணிவண்ணன் இயற்கை எய்தினார்!

பாரதிராஜாவிடம் உதவியாளராகப் பணியாற்றி கோபுரங்கள் சாய்வதில்லை படம் மூலம்இயக்குனர்

அவதாரம் எடுத்து கடந்த மாதத்தில் தனது 50வது படமாக நாகராஜ சோழன்எம்.ஏ.,எம்.எல்.ஏவை
இயக்கிய இயக்குனர் மணிவண்ணன் இன்று இயற்கை எய்தினார்.தமிழ்சினிமாவின் தலைசிறந்த
ஒரு கோபுரம்

சாய்ந்திருக்கிறது என்று சொன்னால்அதுமிகையாது.

ஆனாலும் இவர் இயக்கிய படங்கள் நிச்சயம் ரசிகர்களுக்கு மட்டுமின்றிதிரைப்படங்கள்
இயக்க வருபவர்களுக்கும் என்றும் சாயாத கலங்கரைவிளக்கக் கோபுரங்களாத்திகழும்
என்பதில் ஐயமில்லை. பாரதிராஜாவின் பலபடங்களுக்கு வசனகர்த்தாவாகப்பணியாற்றிய
இயக்குனர் மணிவண்ணனை தனது கொடிபறக்குது

படம் மூலம் நடிகராகவும்அறிமுகப்படுத்தினார்

இயக்குனர் இமயம் பாரதிராஜா. தொடர்ந்து மூன்னுறுக்கும் மேற்பட்டபடங்களில் குணச்சித்திர
நடிகராக, வில்லனாக மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கும்இவரது வெற்றிக் கொடி
சமீபத்தில் வெளிவந்த நாகராஜ சோழன் படம் வரை தமிழ்ரசிகர்களின்இதயத்தில் பறந்தது
குறிப்பிடத்தக்கது. இயக்குனர் மணிவண்ணன்

கோயம்புத்தூர் மாவட்டத்தைச்சேர்ந்தவர்.

அதே மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் சத்யராஜை வைத்து 25 படங்கள் இயக்கியவர்.இவர்களது
கூட்டணி தமிழ்சினிமாவில் வசூலைக்குவிக்கும் கூட்டணி என்றால் அதுமிகையாகாது.
அதற்கு இவர்களது கூட்டணியில் கடந்த மாதம் வெளிவந்து வெற்றி பெற்றநாகராஜசோழன்
படமும் மிகப்பெரிய உதாரணம்.

இயக்கத்துடன் சிறந்த வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும்
ரசிகர்களிடையேவரவேற்பினைப் பெற்றிருக்கும் மணிவண்ணன் என்னங்கண்ணா…
இல்லைங்கண்ணா … என்கிறகோயமுத்தூர் வார்த்தைகளைப் பிரபலப்படுத்தியதில்
இளையதளபதி விஜய்க்கே முன்னோடிஎனலாம்.

அரசியலில் மிகுந்த நாட்டமுடைய மணிவண்ணன் ஆரம்பகாலத்தில் வைகோவுடனும்
பின்புசீமானுடன் இணைந்து நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும்
பணியாற்றினார். மனதில் பட்டதை வெளிப்படையாகவும் துணிச்சலுடனும் பேசுவதை

வழக்கமாகக் கொண்ட இயக்குனர் மணிவண்ணன்,

ஈழத்தமிழர் படுகொலையில் திராவிடமுன்னேற்றக்கழகம்

தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் விழைவித்து விட்டது என்று நாம்தமிழர் கட்சிக்கூட்டங்களில்

மேடைக்கு மேடை முழங்கினார். இலங்கைத் தமிழர்களையும்விடுதலைப்புலிகளையும் மனதில்
கொண்டே நாகராஜ சோழன் படத்தில் சீமான்கதாபாத்திரத்தைப் படைத்தார் என்பதும்

குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த மறுமுகம் படத்தின் பாடல்வெளியீட்டு விழாதான்
மணிவண்ணன் கலந்துகொண்ட கடைசித் திரைப்படவிழா. அந்த மேடையில் பேசிய
மணிவண்ணன், தனது குரு நாதர்பாரதிராஜாவுக்கும்

தனக்கும் இடையே இருந்த குரு சிஷ்யன் உறவினையும்இருவருக்குமிடையே ஏற்ப்பட்ட
சுவராஸ்யமான

சம்பவங்களையும் நினைவு கூர்ந்தார். அதேமேடையில் தனக்கு சினிமாவைத் தவிர

வேறொன்றும் தெரியாது என்று அவர் குறிப்பிட்டதுநினைவு கூறத்தக்கது.

திரைப்படத்துறைக்கென்றே அவதாரம் எடுத்தது போல 1955 ஜூலை 31 ஆம் தேதியில் பிறந்தஇயக்குனர் மணிவண்ணன்,

இன்று ஜூன் 15, 2013 தனது 30 வருடங்களுக்கும் மேலானதிரைவாழ்க்கையைத் தனது இறுதி மூச்சுவரை
வாழ்ந்த பெருமிதத்துடன் மாரடப்பால்

இயற்கைஎய்தினார்.

அன்னாரது மறைவிற்கு நாம்தமிழர் கட்சியின் நிறுவனரும் இயக்குனர் நடிகருமான சீமான்

ஆயிரக்கணக்கான நாம் தமிழர்

கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உட்படமணிவண்ணனின் நெருங்கிய நண்பர்
நடிகர் சத்யராஜ் மற்றும் ஏராளமான

திரையுலகப்பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

இயக்குனர் மணிவண்ணனின் உடல் சென்னை ராமாவரம் ஜெய்பாலாஜி நகரில் உள்ள
அவரதுவீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.