யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டங்களும், சிறந்த வீரார்களுக்கான கௌரவிப்புக்களும் இன்று புத்தூர் கலைமதி விளையாட்டுக்கழக கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றன.இதில் இறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளும் பற்றின. மற்றும் வல்வை புளுஸ் விளையாட்டுகழகத்தை சேர்ந்த மூத்த, சிறந்த வீரர் திரு.ச .க.தேவசிகாமணி (பொட்டுக்கட்டி) அவர்கள் மூத்த சிறந்த பல்துறை வீரராக பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டார்.