TRO உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை புளுஸ் 12 வயதிற்குற்பட்டோர் அணி வெற்றி

TRO உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை புளுஸ் 12 வயதிற்குற்பட்டோர் அணி வெற்றி

16-06-2013 அன்று லண்டனில் நடைபெற்ற 23ஆவது வருடாந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை புளுஸ்சின் 12 வயதிற்குற்பட்டோர் அணி வெற்றி பெற்றது
அரை இறுதி ஆட்டத்தில் 5 கோல்கள் அடித்து வெற்றி பெற்ற வல்வை புளுஸ் அணியினர் , இறுதி ஆட்டத்தில் மயிலிட்டி கண்ணகி அணிக்கு எதிராக ஒரு கோலை அடித்து வெற்றி பெற்றதன் மூலம் 12 வயதிற்குற்பட்டோரின் 2013 ஆம் ஆண்டிற்கான TRO வின் வெற்றிக்கிண்னத்தை தமதாக்கிக்கொண்டனர்.

இறுதிப் போட்டியில் சயித் ஜெயகிருஷ்ணா 1 கோலை அடித்திருந்தார். இன்று 12 வயதிற்குற்பட்டோர் அணியில் விளையாடிய அனைத்து வீரர்களுடைய விளையாட்டும் மிகவும் சிறப்பாக இருந்தது. சுற்றுப்போட்டி முழுவதிலும் சிறப்பாக விளையாடிய வல்வை புளுஸ் அணியின் வீரர் மிதுரன் பிரபாகரனிற்கு சுற்றுப்போட்டியின் சிறந்த வீரருக்கான பரிசு வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *