சிதம்பராக் கல்லூரி நலன்புரி வலையமைப்பினர் (chithambara College well-wishers network)கணிதப் போட்டிக்கான (Mathematics Challenge )தமது உத்தியோகபூர்வ அலுவலகத்தை 09/06/2013 அன்று 31-39 Miles Road, Mitcham, Surrey, CR4 3DA எனும் முகவரியில் திறந்து வைத்தனர்.
சிதம்பரா கல்லூரி நலன்புரி வலையபைப்பின் புதிய அலுவலகத் திரு.ந.நவீந்திரன் (கணக்காய்வாளர்) அவர்களால் 09.06.2013 அன்று திறந்து வைக்கப்பட்டது.
ஆன்றய விழாவிற்கு வல்வை நலன்புரிச்சங்கத்தின் நிர்வாகிகளும். சிதம்பரா நலன்புரி வலையபைப்பின் நிர்வாகிகளுடன் புதிதாக இந்தக் கணிதப் போட்டியை தொடர்ந்து நடாத்துவதற்கு முன்வந்த இழைய சமுதாயத்தினரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
வல்வை நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில் Chithambara College Well-wishers Network (CWN) சிதம்பரா நலன்புரி வலையமைப்பினரால் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்ட கணிதப் போட்டி இன்று தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது யாவரும் அறிந்த விடயமாகும்.
கடந்த ஆண்டு நான்கு பரீட்சை நிலையங்களில் நடாத்தப் பட்ட பரீட்சை இந்த ஆண்டு பதின்மூன்று நிலையங்களில் நடாத்தப்பட்டு கிட்டத்தட்ட 1500 மாணவர்கள் பங்கு பற்றியது குறிப்படத்தக்க விடயமாகும்.
தமது அனைத்து பணிகளும் இவ் அலுவலகம் ஊடகவே மேற்கொள்ளப்படுவதாகவும், நடந்து முடிந்த கணிதப்போட்டியின் ( Mathematic Challenge 2013) பரீட்சைப்பேப்பர்களின் திருத்த வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.