வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிகழ்வையொட்டி இன்று நடைபெற்ற வதிரி டைமண்ட் மற்றும் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டம், வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழக வீரர்கள் மீது நடுவர் மேற்கொண்ட ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடையில் நின்றது.
இரு கழகங்களும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்ற நிலையில், ஆட்டத்தின் சுமார் 10 நிமிடத்துக்கு முன்பாக, ஆதிசக்தி விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக நடுவரினால் ஒரு தண்ட உதை வழங்கப்பட்டிருந்தது. இது ஆதிசக்தி விளையாட்டுக்கழக கோல் காப்பாளர் பந்தினைப் பிடிப்பதற்காக அவர் குறிப்பிட்ட எல்லையை தாண்டியதாக நடுவரினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்ட சர்ச்சையினால் ஆதிசக்தி விளையாட்டு வீரர்கள் மூவருக்கு நடுவரினால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. இதன் முன்னரும் 2 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டிருந்தது.
இவற்றினால் நடுவருக்கும் ஆதிசக்தி விளையாட்டுக் கழக வீரர்களுக்கும் ஏற்பட்ட வாதங்களாலும், அதனால் ஏற்பட்ட அசௌகரியங்களாலும் போட்டி இடையில் நிறுத்தப்பட்டது.
இது இவ்வாறிருக்க இன்றைய முதலாவது ஆட்டத்தில் பருத்தித்துறை St Saviours விளையாட்டுக்கழகமானது மணற்காடு St Antonys விளையாட்டுக் கழகத்தை தண்ட உதையில் வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிமிடையிலான போட்டியில், இரு அணிகளும் தலா இரு கோல்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை St Saviours விளையாட்டுக்கழகம் எதிர் மணற்காடு St Antonys விளையாட்டுக் கழகம்