வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியை சேர்ந்த நவநாதனின் மகளான செல்வி. சரிகா நவநாதன் தமிழ்நாட்டு தொலைக்காட்சியில் நடைபெற்ற சிறந்தபாடகர்போட்டியில் தமிழீழத்தின்மீதான தனது பற்றுதலையும்,தனது பெற்றோரும் தானும் தொலைத்துவிட்ட தமது தமிழீழதேசத்தின் வனப்புகளை அழகாகவும் உணர்ச்சியுடனும் எடுத்துகூறி பார்வையாளர்களையும் தொலைக்காட்சி நேயர்களையும் தமிழீழத்தின்மீது கவனம்வர செய்துள்ளார்.
புலம்பெயர்தேசமான கனடாவில் பிறந்திருந்தாலும் ஒருமுறைகூட தாயகத்துக்கு சென்றிருக்காது விட்டாலும் சரிகாவின் ஆழ்மனதில் தாயகம்மீதான பற்றுதலை வளர்த்த பெற்றோர் தலைவணங்கி பாராட்டதக்கவர்கள்.
லட்சம்மக்கள் பங்குகொள்ளும் பேரணிகள் உருவாக்கும் எழுச்சியைவிட அதிகமான எழுச்சியையும் உணர்வுரீதியான தமிழீழஆதரவையும் இந்த சிறுமி தனது குரலால் உருவாக்கியுள்ளார்.
தொடர்ந்தும் தமிழர்கள் எழுவார்கள்.தமது குரலை விடுதலைக்காக ஒலிப்பார்கள்.ஒடுக்குதலுக்கு உள்ளாகி அழிக்கப்பட்டுவரும் தமது உறவுகளுக்காக போராடுவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்திய ஒரு குரல் சரிகாவினுடையது.
எங்கள் மனம்நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் சரிகாவிற்கு.