படத்தில் காணப்படுவது 11.75 அடி நீளமுடைய வல்வை நாயகி எனப் பெயரிடப்பட்டுள்ள சிறிய பாய்மரக்கப்பல் ஆகும் . யாழ் தீபகற்பத்தின் வடமராட்சியின் கிழக்கு கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள நாகர் கோவில் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள இக்கப்பல், நாகர் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 7 ஆம் திருவிழாவான கப்பல் திருவிழாவின் பொழுது பயன்படுத்தப்படுவதாகும்.
கடந்த வருடம் (2012) வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதிய கப்பலான வல்வை நாயகி, 1957 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.ஆறுமுகம் மேஸ்திரி அவர்களால் வடிவமைக்கப்படிருந்து தற்பொழுது பழுதடைந்துள்ள முன்னைய வல்வை நாயகிக்கு மாற்றீடாகும்.
புதிய வல்வை நாயகி கப்பலை வடிவமைத்துள்ளவர்கள் வல்வெட்டித்துறைச் சேர்ந்த திரு.பழனி மேஸ்திரி, (திரு.ஆறுமுகம் மேச்திரியின் மகன்) குஞ்சு மேஸ்திரி, ஞானம் மேஸ்திரி மற்றும் கட்டி மேஸ்திரி ஆவார்கள். ன்னர் நாகர் கோவிலில் பாவிக்கப்பட்ட, 1957 ல் செய்யப்பட்ட வல்வை நாயகி தற்பொழுது வல்வெட்டிதுறைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.