தமிழ்த் தேசிய வீரர்கள் தினம் – TAMIL NATIONAL HEROS’ DAY
25.07.2023 யூலையில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலையின் நினைவும், கொழும்பு வெலிக்கடைச் சிறையில் இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகளின் இனப் படுகொலையின் 40 ஆவது வருட நினைவு நாட்கள் யூலை 25, 27
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாலிங்கம் அவர்களின் அலுவலகத்தின் முன்பாக 40 ஆவது வருட நினைவு நாட்கள் யூலை 25, 27 அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.அவர் மேலும் நினைவுரையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1983 ஆம் ஆண்டு யூலை 25. 27 திகதிகளில் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தேச பிதா தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன், நடேசுதாசன். சிவபாதம், குமார், ஸ்ரீக்குமார், மரியாம்பிள்ளை, குமாரகுலசிங்கம் உட்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளுக்கும். 1983 யூலையில் படுகொலை செய்யப்பட்டசுமார் ஐந்தாயிரம் தமிழ் பொது மக்களுக்கும் இதுவரை தமிழ் இனப் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ்ப் பொது மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த தலைவர்கள். அனைத்து விடுதலை இயக்கங்களையும் சேர்ந்த ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள், வீர மறவர்கள் உட்பட்ட அத்தனை தமிழ்த் தேசிய வீரர்களுக்கும் எமது வீர வணக்கம்.
நானூறாண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கீச நாட்டவரிடம் இழந்த இறைமையை (SOVEREIGNTY) மீட்கவும், தமிழ் இனப் படுகொலையின் (TAMIL GENOCIDE) குற்றவாளிகளை சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்தில் (ICC) நீதியை நிலைநாட்டவும் ஈடுசெய் நீதியை (REMEDIAL JUSTICE) பெற்றுக்கொள்ளவும். தமிழ் இனப் படுகொலை மீள நிகழாது இருப்பதற்கும் (NON-RECERRENCE) ஐ பெறவும், ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் (SELF-DETERMINATION) அடிப்படையில் சுதந்திரத்திற்கான பொதுசன வாக்கெடுப்பை (INDEPENDENCE REFERENDUM) ஒன்றை இலங்கையின் வட-கிழக்கு பிராந்தியத்தில் ஐக்கிய நாடு சபையின் கண்காணிப்பில் நடாத்த சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்று கோருகின்றோம்,
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ? என்று மடியும் இந்த அடிமையின் மோகம் ?
தமிழர்களின் தாகம் ! தமிழ் ஈழத் தாயகம் !!