Search

இந்த ஆண்டின் வல்வை வி.க வெற்றிகள்!

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான துடுப்பெடுத்தாட்ட
சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 20.02.2012  காலை 9மணியளவில் திக்கம்
இளைஞர்விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமானது.

வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பொலிகை ஐக்கிய விளையாட்டுக்கழகம் விளையாடியது.
போட்டியின் முடிவில் பொலிகை ஐ.வி கழகம் 19 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.வல்வை வி.க இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

இந்த சுற்றுப்போட்டியில் முதலாம்இடத்தை வெற்றியீட்டிய பொலிகை ஐ.வி.கழகத்துக்கு எமது பாராட்டுக்கள்.
அத்துடன் இந்த சுற்றுப்போட்டியில் இறுதிஆட்டம்வரை முன்னேறிய வல்வை வி.கழக வீரர்களுக்கும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கும் கழக நிர்வாகிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் vvtuk.com இணையம் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் என்றென்றும் கூறி நிற்கின்றது.

இந்த வருடத்தில் பருத்தித்துறை பிரதேசசெயலகம் நடாத்திய சுற்றுப்போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றிகளை பெற்ற வல்வை வி.கழகம் தர வரிசையில் இரண்டாம்இடத்தை பெற்று முன்ணணியில் நிற்கின்றது.

நிற்கின்றது.
1)கரப்பந்தாட்டம்(ஆண்கள்) -முதலாம்இடம்
2)எல்லே             (ஆண்கள்) – இரண்டாம்இடம்
3)துடுப்பெடுத்தாட்டம்(ஆண்கள்) – இரண்டாம்இடம்
4) உதைபந்தாட்டம்    (பெண்கள்) -இரண்டாம்இடம்
இந்த விளையாட்டுகளில் விளையாடிய வீரர்கள்,வீராங்கனைகள் அனைவருக்கும் பயிற்சியாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *