பருத்தித்துறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான ஆண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் தொண்டமானாறு கலையரசி அணியுடனான இறுதிப் போட்டியில் 2:0 என்ற செற் கணக்கில்கரப்பந்தாட்டத்தில் இரண்டாமிடத்தைப் பெற்றது வல்வை ஆண்கள் அணி.
இன்று 03/09/2023 பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பருத்தித்துறை பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான இளைஞர் விளையாட்டு விழாவில் தடகள போட்டியில் பங்குபற்றிய வல்வை விளையாட்டுக்கழகத்தினை சேர்ந்த திரு. சி. தர்ஷன் அவர்கள்
100 M போட்டியில் முதலாம் இடத்தினையும்
நீளம்பாய்தலில் முதலாமிடத்தினையும்
முப்பாய்தல் போட்டியில் இரண்டாமிடத்தினையும்
பெற்று மாவட்ட மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
தடகள போட்டியில் பங்குபற்றிய வல்வை விளையாட்டுக்கழகத்தினை சேர்ந்த திரு. கீ.கீர்த்திகன் அவர்கள்
100 M போட்டியில் #இரண்டாம் இடத்தினையும்
நீளம்பாய்தலில் இரண்டாமிடத்தினையும்
800M போட்டியில் மூன்றாமிடத்தினையும்
பெற்று மாவட்ட மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.