யா/வல்வை மகளீர் மகா வித்தியாலய 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு நடைபெற்ற நடைபவணி ஈருளி பவணி உந்துஈருளி பவணி பாடசாலை மாணவ மாணவிகள் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் பெற்றோர்கள் வல்வை வாழ் மக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் யாதெனில் உடுப்பட்டி மகளிர் கல்லூரி,வல்வை அ.மி.த.க பாடசாலை கணபதி பாலர் பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்கள் இவர்களை வரவேற்று தாக சாந்தி சிற்றுண்டி வழங்கிக் கௌரவித்து வைத்தார்கள்.





















































































































































