கூடாங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டகுழுவின் அறிவிப்பு!

நண்பர்களே,
வணக்கம்.கூடங்குளம் அணு மின் உலையை எதிர்த்து மாவட்ட மக்கள் இடிந்தகரை எனும் இடத்தில் மிகப் பெரும் போரை  தொடங்கி உள்ளனர். 127 பேர் இன்று 6 வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளனர்.இவர்களுக்கு ஆதரவாக இருபது ஆயிரம்  பேர் தொடர் உண்ணவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் காலையில் வந்து இரவில் ஊருக்கு திரும்பி மீண்டும் காலையில் வந்து விடுகின்றனர்.பகல் முழுவதும் ஆறு நாட்களாக 20000 பேரும் பட்டினி கிடக்கின்றனர்.பள்ளி மாணவ,மாணவியர் சீருடையுடன் பள்ளியை புறக்கணித்து வந்து முழக்கம் போடுகின்றனர்.தமிழக வரலாற்றில் கண்டறியாத போராட்டம் இது என்று  அங்கு சென்று பார்த்த பின் தான் உணர்ந்தேன்.வெளி உலகில் இப்போராட்டத்தின் பிரம்மாண்டம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.ஊடகங்கள் அரசுக்கு ஆதரவாக இருந்துகொண்டு சரியாக செய்தி வெளியிட வில்லை.சமூக உணர்வாளர்கள்  ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய போராட்டம் இது.இது குறித்து இணையதளம், கைபேசிகளிலும் போதுமான பிரச்சாரம் இல்லை.உடன் இச் செய்தியை அனைவருக்கும் forward செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது கூடன்குள மக்களின்வாழ்வியல்  பிரச்சனை மட்டுமல்ல,தமிழக மக்களின் உயிர் பிரச்சனை மட்டுமல்ல,மனித இனத்திற்கே சவாலான பிரச்சனை என்பதை கருத்தில் கொண்டு போராடும் மக்களுடன் உறுதியாக கை கோர்ப்போம்.அனைவரும் சென்று வருவோம்.தமிழகம் முழுவதையும் ஆதரவாக்குவோம். தொடர்புக்கு:உதயகுமார் 9865683735 ,புஷ்ப ராயன்9842154073 ,வைபா 9443962021

அன்புடன்,
போராட்டகுழுவின் சார்பில்
பிரபாகரன்.

Leave a Reply

Your email address will not be published.