அன்னபூரணியின் 75வது வருட நிறைவை கொண்டாடும் முகமாக, வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) 8வது கோடைவிழாவில் 07.07.2013 அன்று அன்னபூரணிக் கப்பலின் மாதிரி வடிவத்தை அங்கு கூடும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் வண்ணம் உலகறியச் செய்வதற்கு மிகவும் திறமையான முறையில் உருவாக்கி வருகின்றனர் வல்வை மக்கள்!
இவ் அன்னபூரணிக் கப்பலின் மாதிரி வடிவத்தை திரு சதான் அண்ணா தலைமை ஏற்று திரு யோகி அண்ணா திரு ராசு அண்ணா ஆகியோரும் இணைந்து மிகவும் அழகாக வடிவமைத்து வருகின்றனர் இவர்களுடன் பல வல்வை நலன்விரும்பிகள் உதவி செய்து வருகின்றனர்.