அன்பான வல்வை பட்டதாரிகளே வாரீர் வாரீர்
வலிமை மிக்க வல்வை மண்ணை வளமாக்க வாரீர்
கல்வி என்ற மூலதனம் கொண்டு வருங்கால சந்ததிக்கு வழிகாட்ட வாரீர்
தனித்தனியாக துறைசார் கல்வியில் கற்றுயர்ந்த நீங்கள் ஓர் அணியாய் வழிகாட்ட வாரீர்
தாயகத்திலும் புலத்திலும் எம் இளைய சந்ததிக்கு கல்வியின் வலிமையை,தேவையை உணர்த்திட வாரீர்
வல்வை பட்டதாரிகள் சம்மேளனத்தின் நோக்கங்களாக
1)இங்கு O/L பரீட்சை முடித்த மாணவர்கள் எப்படி A/L பாடங்களை தெரிவு செய்வது என்பது பற்றிய தெளிவூட்டல்
2)இங்கு A/L முடித்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களை எப்படி தெரிவு செய்தல் அதற்கான வழி வகைகள்
3) பட்டப்படிப்பு முடித்த பின் தொழில் வாய்ப்பை தேடும்போது அனுபவம் உள்ளவர்கள் வழிகோலிவிடல்
4) அனுபவம் உள்ளவர்கள் கூட்டாக ஓர் தொழில் முயற்சியை ஆரம்பித்தல்
5) கல்வி விடயத்தில் தாயகம் ,புலத்தில் உள்ள எதிர்கால சந்ததிக்கு உதவுதல்
alvai Graduate’ Database (வல்வை பட்டதாரிகள் விபரக்கோவை)
வல்வைப் பட்டதாரிகளின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றது.
கீழே உள்ள படிவத்தினை நிரப்பி உங்கள் விபரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்
அத்துடன், எமது வல்வைப்பட்டதாரிகள் சம்மேளன ஆரம்பவிழா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 07-01-2024 மாலை 3-5 மணிவரை All Saints Center, New Road, Mitcham CR4 4JN மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து பிரித்தானியா வாழ் வல்வைப்பட்டதாரிகளையும், சம்மேளன ஆதரவாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளையும் இதில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நன்றி
வல்வைபட்டதாரிகள் சம்மேளனம் சார்பாக
சிவலீலன். சி
07886307161