இறுதிக் கிரியை அறிவித்தல் அமரர் வைத்தியலிங்கம் சிவகுகதாசன்

இறுதிக் கிரியை  அறிவித்தல் அமரர் வைத்தியலிங்கம் சிவகுகதாசன்

பிறப்பு: 12/05/1934          இறப்பு: 01/03/2024

வல்வெட்டித்துறையை  பிறப்பிடமாகவும்  வித்தனை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் சிவகுகதாசன் ( ஓய்வுநிலை அதிபர்) கடந்த வெள்ளிக்கிழமை 01/03/2024 அன்று காலமானார். இவர் காலஞ்சென்ற இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான  வைத்தியலிங்கம் மற்றும் பொன்னாம்பிகையின்  புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிங்கப்பூர் சண்முகம் மற்றும் லெட்சுமியம்மாவின் அன்பு மருமகனும் ஆவார். அன்னார், அமரர் ஏகம்பதாசன், அமரர் இராமநாததாசன் மற்றும் கதிர்காமதாசன், கனகாம்பிகை, அமரர் மகேசதாசன் மற்றும் அன்னபூரணி, அமரர்  நடேசுதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், அமரர்  துரைசிங்கம், இராஜலிங்கம், அமரர்  செல்லதுரை, அமரர் இரத்தினசாமி மற்றும் இரத்தினசபாபதி, இராஜலஷ்மி மற்றும்  அமரர்  சற்குணபூசணி, நாகசுந்தரேஸ்வரி, அமரர்  தையல்நாயகி, மீனாட்சிசுந்தரம், அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னார், அமரர்  ஜெகதீசன், அமரர் ஜெயந்தி மற்றும் ஜெகரூபன், வசந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும், அபர்ணா, செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,மயூரன், கேசவன், பிரபாகர், கோபிகா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் பூதவுடலானது அன்னாரின் வல்வெட்டித்துறை வித்தனை ஒழுங்கை இல்லத்தில் நாளை காலை எட்டு மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2 மணிக்கு கிரியைகள் இடம்பெற்று தகனத்துக்காக வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்துக்கு தகனத்துக்காக மாலை 4 மணிக்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல்

குடும்பத்தினர்