ஒரு ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டிய நிலையில் வல்வை புளூஸ்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை 19/02/2012 அன்று இடம்பெற்ற இறுதிச்சுற்றின் முதலாவது போட்டியில் வல்வை புளூஸ் அணி நோர்த் வெஸ்ட் லண்டன் அணியை 1 -0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   இந்த அணியுடன் முதலாம் சுற்றில் புளூஸ் அணி 3 -2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றும் இரண்டாம் சுற்றில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றும் இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

இடைவேளைக்கு முதல் வல்வை புளூஸ் அணி 1 -0 என்ற வித்தியாசத்தில் முன்னியில் நின்றது.  எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தும் நோர்த் வெஸ்ட் லண்டன் அணியின் பந்து காப்பாளரின் திறமையான ஆட்டத்தினால் வல்வை புளூஸ் அணியால் ஒன்றிற்கு மேற்பட்ட கோல்களை போட முடியவில்லை.

இரண்டாம் இடத்தில் இருக்கும் சுபன் விளையாட்டுக் கழகம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கும் நோர்த் வெஸ்ட் லண்டன் அணிகள் இன்றைய போட்டிகளில் எந்த புள்ளிகளையும் பெறாத நிலையில் வல்வை புளூஸ் மூன்று புள்ளிகளை பெற்றதனால் வல்வை புளூஸ் அணிக்கும் இவர்களிற்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் 10 ஆக அதிகரித்ததனால் வல்வை புளூஸ் கழகம் இன்னும் எஞ்சியிருக்கும் நான்கு போட்டிகளில் ஒரு போட்டியை வெற்றி பெற்று மூன்று புள்ளிகளை பெற்றாலே  இந்த லீக்-ஐ வெற்றி பெற்று அடுத்தவருடம் பிரிமியர் பிரிவில் விளையாடுவதற்கு போதுமானதாகும்.

செய்திகள்: ஆதவன்

Leave a Reply

Your email address will not be published.