யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுயாதீன ஊடவியலாளர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலுடன் தொடர்புடைய ஜவர் கைது!
யாழ்.திருநெல்வேலி கலாசாலைப் பகுதியினைச் சேர்ந்த சி.மயூரதன் (வயது 26) என்பவரே மேற்படித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.குறித்த சுயாதீன ஊடகவியலாளரைத் தாக்கிய இனந்தெரியாத நபர்கள் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் கைத்தொலைபேசி என்பனவற்றையும் பறிமுதல் செய்து சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.
இன்று மாலை 5 மணியளவில் யாழ்.திருநெல்வேலி கலாசாலைப் பகுதியல் நின்றுகொண்டிருந்த கறித்த சுயாதீன ஊடகவியலாரை அங்கு ஹயஸ் வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் கண்மூடித்தாமாக தாக்குதல் நடத்தியுள்ளர்.
இதன் போது குறித்த சுயாதீன ஊடகவியலாளர் மீதான தாக்குதலை தடுக்க முற்பட்ட யாழ்.நல்லூர் பிரதேச சபை உத்தியோகஸ்தர் மீதும் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல்துறை நிலையத்தில் மாலை 7 மணியளவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் தகவலை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட காவல்துiயினர் அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் மேற்படித் தாக்குதலை நடத்திய இனந்தெரியாத நபர்களை கைது செய்துள்ளனர். அத்துடன் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படும் இரும்புக்கம்பிகள், ஹயஸ் வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் நாளை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.