01.08.2013 அன்று Vildbjerg நகரில் ஆரம்பமானது இவ் சுற்றுப்போட்டியில் America, Malta, Germany, Nertheland, Norway, Sweden, Findland, Island ,Faroe, Islands, Bermuda, உடன் Tamileelam
அணியும் கலந்து கொள்கின்றன.
இவ் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மதியம் 13:15 மணிக்கு அணிகளின் அணிவகுப்பு Park Alle யில் இருந்து Vildbjerg நகர் ஊடாக Sports Alle யை சென்றடைந்தது. இவ் அணிவகுப்பில் தமிழீழ அணிகள் தமிழீழம் என பொறிக்கப்பட்ட உடையுடன் தமிழீழத் தேசியக் கொடியை தாங்கியவாறு அணிவகுப்பில் வலம்
வந்தனர்.
வேற்று இனத்தவர்கள் தமிழீழ அணியை ஒரு நாடாக அங்கிகரித்து உற்சாகத்துடன் வரவேற்றார்கள். முதல் போட்டில் வாகை சூடிய 15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி
இன்று Vildbjerg நகரில் அமைத்துள்ள மைதானத்தில் மாலை 15:30 மணிக்கு Hovme/ Tistuup அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Hovme/ Tistuup 1 இலக்கையும் தமிழீழ அணி 3 இலக்குகளையும்
எடுத்து இந்த போட்டியில் வென்றனர்.
போட்டின் முதல் அரைப்பகுதியில் சங்கீத் சத்தியமூர்த்தி 2 இலக்ககளையும் இரண்டாம் அரைப்பகுதியில் யுகன் பொன்னையா 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 1 – Mariager 2 மாலை 15:30 மணிக்கு Mariager அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Mariager அணி 2 இலக்குகளையும் தமிழீழ அணி 1
இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர்.
இரண்டாம் அரைப்பகுதியில் ராகவ் சிவகுமார் 1 இலக்கை எடுத்து அணிக்கு பெருமை சேர்த்தார்.