வல்வை ப்ளூஸ் மகளிர் அணி ETSYR Cup 2025 வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கியுள்ளது
வரலாறு படைக்கப்பட்டது!
கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக, கால்பந்து முதல் அறிமுகமான இடமான லண்டனில், எங்கள் வல்வை ப்ளூஸ் மகளிர் அணி ETSYR Cup 2025 வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை Essex Tamil Sangam நடத்திய ஐவர் உதைபந்தாட்ட போட்டியில் வல்வை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய புளுஸ் மகளிர் அணி சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது.
இந்த வெற்றி, வல்வை வரலாற்றில் இதுவரை நிகழாத சாதனையாகும். இது எப்போதும் வல்வை ப்ளூஸ் விளையாட்டு வரலாற்றில் பெருமையுடன் நினைவுகூரப்படும்.
எங்கள் வீராங்கனைகளின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, மற்றும் போராட்ட மனப்பாங்கு எங்கள் கழகத்திற்கும், எங்கள் சமூகத்திற்கும் பெருமையை கொண்டு வந்துள்ளது. நீங்கள் அனைவரும் எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள், என்றும் வல்வையின் பெருமைகள் ஆவீர்கள்.
வாழ்த்துக்கள் வல்வை ப்ளூஸ் மகளிர் அணி – வரலாற்றை படைத்தவர்கள்!












