மருத்துவ உபகரண உதிரிபாகங்கள் கையளிப்பு
லண்டனில் இருந்து வல்வை நலன்புரி சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் அனுப்பி வைக்கப்பட்ட பல்வேறு உபகரண உதிரிபாகங்கள் யாழ் போதானா வைத்தியசாலையின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சத்திரசிகிச்சை உதிரிபாகங்களும் உள்ளடங்கும்.
வட மாகாணத்தின் மிக முக்கியமான மருத்துவமனையாகிய யாழ் போதானா வைத்தியசாலையில் பல்வேறு உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ளது. வழங்கப்பட்டுள்ள மருத்துவ உதிரிபாகங்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும், வைத்தியசாலையின் மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்தவும் உதவும்.














