வல்வை மகளிர் மகா வித்தியாலய பாடசாலையின் தரம் 1 (2025) வகுப்பறை மாதிரி வகுப்பறையாக புனரமைப்பு
வல்வை மகளிர் மகா வித்தியாலய பாடசாலையின் தரம் 1 (2025) வகுப்பறை மாதிரி வகுப்பறையாக விஷ்ணுசுந்தரம் அருள்சுந்தரம் அவர்களினால் புனரமைப்பு செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும் அவர்களின் தந்தை திரு.அ.சி. விஷ்ணு சுந்தரம் அவர்கள் எமது பாடசாலைக்கு 1972 ஆம் ஆண்டு கட்டி முடித்து ஒப்படைத்த இருமாடி கட்டிடத்தின் ஒரு பகுதியில் இது அமைந்துள்ளது. தொடர்ந்து இக்கட்டட புனரமைப்பு வேலை அன்பளிப்புகளை விஷ்ணு சுந்தரம் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் புனரமைப்பு செய்து தருவதற்கு முன்வந்தமையும் விஷ்ணு சுந்தரம் அவர்களின் மூத்த புதல்வியான அமரர் கமலா தேவி திருவடிவேல் அவர்களின் ஞாபகார்த்தமாக முதலில் தரம் 1(2025) வகுப்பறை புனரமைப்பு நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.












