மூன்றாம் நாள் போட்டிகளில் வாகை சூடிய தமிழீழ அணிகள்.

Vildbjerg cup 2013 ன் மூன்றாம் நாளான 03.08.2013 அன்று நடை பெற்ற 4 போட்டிகளிலும் தமிழீழ அணிகள் வாகை சூடின.

நாளை அரையிறுதி போட்டியில் தமிழீழ அணிகள் விளையாடவுள்ளது. ஆகையால் டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு வீரர்களுக்கு உற்சாகம் வழங்குமாறு டென்மார்க் விளையாட்டுத்துறை அழைப்பு விடுக்கிறது.

04.08.2013 நடைபெற உள்ள தமிழீழ அணிகளின் போட்டி விபரம்:

Tamileelam vs Aabyhøj IF(Danmark) 15 வயதிற்குட்பட்டோர் நேரம் 09:45 மைதானம் 16A

Tamileelam vs Ranum-Overlade IK Vest(Danmark) 13 வயதிற்குட்பட்டோர் நேரம் 09:45 மைதானம் 15A

15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 1 : 0 Hurup / Vaif (Danmark)

இன்று Vildbjerg நகரில் அமைத்துள்ள மைதானத்தில் காலை 08:00 மணிக்கு Hurup / Vaif அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Hurup / Vaif 0 இலக்கையும் தமிழீழ அணி 1 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வென்றனர்.

வைஸ்ணவன் சற்குணநாதன் சிறப்பாக விளையாடி 1 இலக்கை எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 4 : 0 Sulsted / Vestbjerg (Danmark)

மதியம் 12:5 மணிக்கு Sulsted / Vestbjerg அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Sulsted / Vestbjerg அணி 0 இலக்கையும் தமிழீழ அணி 4 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வென்றனர்
சாரங்கன் சிவநாதன் 2 இலக்குகளையும், தினோஜன் திலீபன் 1 இலக்கையும், அபிநயன் ராசசிங்கம் 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்

15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 6 : 0 TuS Tensfeld (Germany)

மாலை 16:45 மணிக்கு TuS Tensfeld அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த காலிறுதி உதை பந்தாட்ட போட்டியில் TuS Tensfeld அணி 0 இலக்கையும் தமிழீழ அணி 6 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

யுகன் பொன்னையா 1 இலக்கையும், வைஸ்ணவன் சற்குணநாதன் 3 இலக்குகளையும், சங்கீத் சத்தியமூர்த்தி 1 இலக்கையும், திபனேஷ் பிரேமச்சந்திரன் 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்

13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 3 : 2 Horne/Tistrup/sig (Danmark)

மாலை 17:55 மணிக்கு Horne/Tistrup/sig அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த காலிறுதி உதை பந்தாட்ட போட்டியில் Horne/Tistrup/sig 2 இலக்குகளையும் தமிழீழ அணி 3 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

சாரங்கன் சிவநாதன் 2 இலக்குகளையும், சாருகன் சிவநாதன் 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
1

2

3

4

5

6

Leave a Reply

Your email address will not be published.