வல்வை உதயசூரியன் கழக 50 வது ஆண்டு நிறைவயோட்டிய விளையாட்டு நிகழ்வுகள் வல்வை மண்ணில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன,இன்றைய மூன்றாம் நாள் காலை நேரத்தில் நடைபெற்ற நிகழ்வுகளான 10 km சைக்கிள் ஓட்டம் பெண்கள்(முதலாம் பரிசு சைக்கிள்),20 km மரதன் ஓட்டம் ஆண்கள்,தம்பதியர் சைக்கிள் ஓட்டம்,வினோத உடைப்போட்டி,4×1 km கழக அஞ்சல் பெண்கள் போன்ற நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் உதயசூரியன் கழகத்தினரால் வல்வை மண்ணில் நடத்தப்பட்டன.இன்று மாலை வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயத்திலிருந்து பிரதம விருந்தினர் மங்கள வாத்தியங்கள் சகிதம் அழைத்து வரும் பொழுது தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வுகளும் கழக அங்கத்துவ மாணவிகளின் பாரத நாட்டிய நிகழ்வும்,அத்துடன் சாந்தன்,சுகுமார் அவர்களின் இன்னிசை நிகழ்வும் நடைபெறவுள்ளது என்பதனை உதயசூரியன் கழகத்தினர் அறியத்தந்திருக்கிரார்கள்.