அமரர் வே .சோதிநாராயானசாமி (பரஞ்சோதியப்பா) மற்றும் சோ.சந்திரமோகன் அவர்களின் ஞாபகார்த்தமாக வல்வை விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிகள் இன்று மாலை வல்வை தீருவில் மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ரெயின்போ விளையாட்டுக்கழகம் மோதியது. தண்ட உதையில் ரெயின்போ விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது. ஆட்டநாயகனாக பிரணவனும் (ரெயின்போ விளையாட்டுக்கழகம் ), சிறந்த கோல்காப்பாளராக சிவகுமார் (உதயசூரியன் விளையாட்டுக்கழகம்) அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.