இலங்கை அரசை இந்தியா ஆதரிக்க கூடாது . இலங்கையை ஐ நா சபை மனித உரிமை கூட்டத் தொடரில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு போராட்டம் சென்னையில் நடந்தது.
போர்க்குற்ற விசாரணையை ஐநா மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், ஜெனீவா கூட்டத்தொடரில் இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னையில் கடந்த சனிக்கிழமை எழுச்சியுடன் நடந்த கோரிக்கை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமானின் தலைமையில் இனமான இயக்குனர் அய்யா மணிவண்ணன் முன்னிலையில் சிறப்பாக நடந்தது.