வல்வை நேதாஜி விளையாட்டு கழகத்தின் 49 ஆவது ஆண்டு நிறைவையொட்டி அக்கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போட்டிகளில் ஒன்றான கபடிப் போட்டி, வல்வை விளையாட்டுக் கழக அணிகளுக்கு இடையே (24.08.2013) நேதாஜி கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது.
இறுதி போட்டிக்கு ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டு கழக B அணியும் அதே கழகத்தைச் சேர்ந்த (ரேவடி) விளையாட்டு கழக C அணியும் மோதிக் கொண்டன. இதில் ரேவடி விளையாட்டு கழக C அணி வெற்றியீட்டியது .
இச்சுற்று போட்டியினிடையே நேதாஜி விளையாட்டி கழக இல்லங்களுக்கு இடையேயான கபடி போட்டியும் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. நாளை இல்லங்களுக்கு இடையேயான ஆரம்பநிலை போட்டிகள் நடைபெறவுள்ளது.
போட்டிகளை வல்வையின் மூத்த விளையாட்டு வீரர் திரு.தேவசிகாமணி, வல்வை விளையாட்டு கழக செயற்குழு உறுப்பினர்கள் சிலர் மற்றும் நேதாஜி விளையாட்டு கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.