வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) ஆதரவுடனும் வல்வை ஒன்றியத்தின் இணை அனுசரணையோடும் நடாத்தப்பட்டுவரும் வல்வை கல்வி அபிவிருத்திச்சங்கத்தினரால் (VEDA) நேற்று, கடந்த க.பொ.த (உ/த) பரீட்ச்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் வழிகாட்டிகளான ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.25.08.2013

 

                                                             மாணவர் கௌரவிப்பு விழா

வல்வை நலன்புரிச் சங்கம் – ஐக்கிய இராச்சியத்தின் அனுசரனையில்  நடாத்தப்பட்டு வரும் வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தில் (VEDA) கல்வி கற்று  கடந்த 2012ம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களும்(. உயர்தரத்திற்கு தகுதி பெற்றதனை கௌரவிக்கும் நிகழ்வானது 2013.08.25 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.45 மணியளவில் VEDA கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.சோ.தண்டபாணிகதேசிகர் அவர்களும், வல்வை நகரசபையின் தவிசாளர் ந.அனந்தராஜ் அவர்களும், யா/வல்வை மகளிர் மகா வித்தியாலய அதிபர் செல்வி.ராஜ்ஜியலக்ஷ;மி சுப்பிரமணியக் குருக்கள் அவர்களும், யா/சிதம்பரக் கல்லூரி அதிபர் திரு.கி.இராஜதுரை அவர்களும், யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை அதிபர் திரு.ஆ.சிவநாதன் அவர்களும், வல்வை ஒன்றியத்தின் பொருளாளர் திரு.ச.கிருஷ்ணகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் வல்வை விளையாட்டுக் கழக உறுப்பினரும், கணபதிப் படிப்பக உறுப்பினர், வல்வை மாலுமிகள் சங்க உறுப்பினர், கலை கலாச்சார இலக்கிய மன்ற உறுப்பினர்களும், குழவிகள் கலா மன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டதுடன் தற்போது VEDA கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் தரம் 09,10,11 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டமை சிறப்பானதாகும்.  மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு அவர்களின் உயர்விற்கு காரணமாக அமைந்த ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் அக்காலப்பகுதியில் மாணவர்களிற்கு வழிகாட்டியாக இருந்து அவர்களது வெற்றிக்குத் துணை நின்ற நிர்வாக உத்தியோகத்தர்களும்  இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
VEDA  கல்வி நிலையத்தின் கணக்காய்வாளரான திரு.பூ.அகமணிதேவர் அவர்கள் தனது வரவேற்புரையினை நிகழ்த்தி இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

 

வரவேற்புரையினைத் தொடர்ந்து ஏநுனுயு கல்வி நிர்வாகத்தின் தலைவர் திரு.ச.மதுசூதனன் அவர்கள் தனது தலைமை உரையில்  VEDA  நிறுவனமானது ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து புலம் பெயர் வாழ் வல்வை மக்களின் நிதிப்பங்களிப்பில் இயங்கி வருவது பெருமைக்குரிய விடயமாகும் எனவும் 2013ம் ஆண்டு மாசி மாதம் தொடக்கம் வல்வை நலன்புரிச் சங்கம் – ஐக்கிய இராச்சியம் முழு நிதிப் பங்களிப்பினையும் வல்வெட்டித்துறை வல்வை ஒன்றியம் ஊடாக  வழங்கி வருகின்றதெனவும்,2014 தை மாதம் தொடக்கம் வல்வை மக்களினதும்,மாணவர்களினதும் வேண்டுகோளிற்கு இணங்க தரம்- 06,07,08 ஆகிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதெனவும் அவ்வகுப்புளிற்கான கொட்டகை அமைப்பதற்காகவும்,வாங்கில் மேசை செய்வதற்காகவும் வல்வை மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டவர்கள் தங்களாலான நிதி உதவியினை தந்துதவுமாறும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்விற்கு வருகை தந்த கௌரவ விருந்தினர்கள் அனைவரும் ஏநுனுயு வின் வளர்ச்சி தொடர்பாகவும்; மாணவர்களது கல்வி முறை மற்றும் ஒழுக்கம் தொடர்பாகவும் காட்டும் அக்கறையினை வரவேற்று தங்களது கருத்துக்களைக் கூறியிருந்தனர். அந்த வகையில் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பிரதமகுரு அவர்கள் VEDA கல்வி நிறுவனமானது வல்வை மாணவர்களின் கல்விப்பணியில் நல்ல சேவையை ஆற்றுகின்றது எனவும் இச்சேவை மேலும் வளர வேண்டும் எனவும், இத்தகைய சேவை வல்வை மாணவர்களுக்கு தொடர்ந்தும் கிடைக்க வேண்டும் என்றும் அதற்கு தன்னாலான உதவிகளை செய்வதற்கு காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
யா/சிதம்பரக் கல்லூரி அதிபர் கூறுகையில் இக்கல்வி நிறவனத்தைப் பார்க்கும் பொழுது தனக்குப் பெருமையாக உள்ளதெனக் கூறியிருந்தார். ஏனெனில் இங்கு கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் மிகவும் அக்கறை கொண்டு அவர்களின் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் மாணவர்களுடனும் VEDA கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவது தனக்கு ஆச்சரியமாகவும்,வரவேற்கத்தக்க விடயமாகவும் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

வல்வட்டித்துறை நகரபிதா அவர்கள் தனது உரையில் VEDA கல்வி நிறுவன சூழலைப்  பார்க்கும் பொழுது பல வருடங்களிற்கு முன்பு வல்வெட்டித்துறை மாணவர்களிற்கு பாரிய கல்விச் சேவையை வழங்கிய வல்வை கல்வி மன்றத்தினைப் போன்ற தோற்றப்பாட்டில் அமைந்துள்ளது. அதே போல் VEDA கல்வி நிறுவனமானது தனது கல்விப் பணியினை ஆற்ற வேண்டும் என்றும்; மாணவர்களிற்கு சாதாரண தரப் பரீட்சையானது முதலாவது படி எனவும் அதனைத் தாண்டி உயர்தரம், பல்கலைக்கழகம் என முன்னேறிச் செல்ல வேண்டுமென்றும் தனது வாழ்த்துக்களைக் கூறினார்.

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலய அதிபர்;  கூறுகையில்
மாணவர்கள் பாடசாலையிலும் கல்வி நிறுவனங்களிலும் கற்கின்ற கல்வியோடு மட்டுமல்லாமல் தமது சுய தேடலிலும் கற்க வேண்டுமெனவும் இதற்கு அவர்களது பெற்றோர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கூறினார்.

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை அதிபர் கூறுகையில் பாடசாலை  மட்டுமன்றி இத்தகைய கல்வி நிறுவனமும் மாணவர்களின் கல்வியில் அக்கறையுடன் செயற்படுவது சிறப்பிற்குரிய ஒன்றாகும் எனவும் புலம்பெயர் வாழும் வல்வை மக்கள் வல்வையிலுள்ள மாணவர்களின் கல்வியில் பெருமளவு அக்கறை கொண்டு நிதிப்பங்களிப்பினை தொடர்ந்தும் மேற்கொள்வது பெருமைக்குரிய விடயமாகும் எனவும் கூறியிருந்தார்.
வல்வையின் கல்வி அபிவிருத்தியில் வல்வையில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் மற்றும் நூலகங்களிற்கும் பங்கு உண்டு என்பதனைக் கருத்தில் கொண்டு வல்வையில் உள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களிற்கும் நூலகங்களிற்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட போதிலும் ஓரிரு விளையாட்டுக் கழகங்களும் நூலகங்களும் மட்டுமே இந்நிகழ்வில் கலந்து கொண்டமை மனவருத்தத்திற்குறிய விடயமாகும்.எதிர்வரும் காலங்களில் வல்வையின் கல்வி அபிவிருத்தி சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலும் வல்வையிலுள்ள அனைத்து அமைப்புக்களினது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று VEDA கல்வி நிறுவனமானது எதிர்பார்க்கின்றது.


Leave a Reply

Your email address will not be published.