இங்கிலாந்தில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து (வீடியோ இணைப்பு)

இங்கிலாந்தில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் சுமார் 130 வாகனங்கள் சேதமடைந்ததுடன் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ஏ249 பிரதான நெடுஞ்சாலையில் இன்று காலை 7.45மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இதில் சுமார் 10க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த வீதியில் விபத்து ஏற்பட்டதுடன் சுமார் 10 நிமிடங்களுக்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் அவலம் நிகழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சில சிறிய வாகனங்கள் பார ஊர்திகளுக்கு கீழ் சென்று சிக்கி கொண்டதாகவும், பிரயாணிகள் அதில் சிக்கி கொண்டு தவித்தனர் என்றும் சம்பவத்தை கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய வாகன விபத்து இது என அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினரும் காவல்துறையினரும் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி கொண்ட பொதுமக்களையும் வாகனங்களையும் மீட்கும் பணிகள் பிற்பகல் வரை தொடர்ந்தது.

சுமார் 10பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் ஏனையவர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

c

Leave a Reply

Your email address will not be published.