இலண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்‏!

அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் அமெரிக்கஅரசு ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக முன்வைத்த பிரேரணையில் இதனை சேர்க்கும்படி கோரியும் இன்று லண்டனில் இருக்கும் அமெரிக்கதூதரகத்தின் முன்னால் பெருமளவிலான மக்கள் கவனயீர்ப்புபோராட்ட்த்தில் திரண்டுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கான அறிவிப்பு செவ்வாய்கிழமைதான் அறிவிக்கப்பட்டு இருந்தபோதும் பெருமளவில் தமிழ்மக்கள் திரண்டுள்ளது எமது மக்களின் உணர்வுக்கு ஒரு உதாரணமாக இருக்கின்றது.
இந்த கவனயீர்ப்புபோராட்டத்துக்கு மக்களை செல்லவேண்டாம் என்றும் சிறீலங்காஅரசுக்கு எதிரான அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்த வேண்டாம் என்றும் லண்டனில் இயங்கும் ஒரு தனியார் வானொலி இன்று மதியம் முதல் பிரச்சாரம் செய்த போதிலும் எமது மக்கள் அதனை நிராகரித்து போர்க்குற்றத்துக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிற்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published.