மரண அறிவித்தல்- திருமதி ஜெயராசா நிலானி
அன்னையின் மடியில் 04.09.1981 ஆண்டவன் அடியில் 16.03.2012
வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெயராசா நிலானி அவர்கள் 16.03.2012 அன்று அகால மரணமானார்.
அன்னார் துரைராசரெட்ணம் தயாநிதி தம்பதிகளின் (கனடா) அன்பு மகளும், வினாயகமூர்த்தி மகாலெட்சுமி தம்பதிகளின் (இலங்கை) பாசமிகு மருமகளும்,
ஜெயராசா (வெள்ளிப்பவுண்) அவர்களின் அன்பு மனைவியும், யோசனாவின் பாசமிகு தாயாரும்.
நவநீதன் (லண்டன்) சத்தியவதனியின் (சுவிஸ்) அன்புச் சகோதரியும்.
லலிதா (லண்டன்) செல்வதயாளன் (மாறன்)(சுவிஸ்) காலஞ்சென்ற யோகராசா செல்வராணி (இலங்கை) புஸ்ப்பராணி (சுவிஸ்) சிவராசா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்.
வினு, திவ்வியா அகியோரின் பாசமிகு அத்தையும் ரிசோத், சுபோத், சுயித் ஆகியோரின் அன்புச் சித்தியுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்.
குடும்பத்தார்
தொடர்புகளிற்கு
ஜெயராசா (கனடா) 0015148007465
நவநீதன் (லண்டன்) 00447957911649
மாறன் (சுவிஸ்) 0041628226706
துரைராசரெட்ணம் (கனடா) 0015143430722