பிரித்தானிய பொலிஸ் இணையத்தளத்தில் புலிக்கொடி உள்ளடக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மொழிக்காக தேசிய கொடியாக புலிக் கொடியை பிரித்தானிய பொலிஸ் இணையத்தளம் உள்ளடக்கியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ் மொழிக்கான தேசிய கொடியாக புலிக் கொடி உள்ளடக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழிக்கு கொடி இல்லாத காரணத்தினால் புலிக் கொடி உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தனிகராலயம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தவறியுள்ளதாக சிங்களப் பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.