champion ஆகுமா வல்வை ப்ளுஸ் கிரிக்கெட் அணி.?
british tamils cricket league, champion division பிரிவில் விளையாடி வரும் வல்வை ப்ளுஸ் கிரிக்கெட் அணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை red bridge அணியை வீழ்த்தியதுடன் champion ஆகும் தகுதியை கிட்டத்தட்ட உறிதிப்படுத்திக்கொண்டது, எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை bromley lions அணியை எதிர்கொள்கிறது இதுவே இந்த வருடத்திற்கான இறுதி போட்டியாகும், இந்த போட்டியில் ( 8 ) புள்ளிகள் மட்டுமே தேவை champion ஆவதற்கு….
ஏற்கனவே bromley lions அணியை 160 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வருட போட்டிகளில் அதிக wickets மற்றும் அதிக runs பெற்றவர்கள் பட்டியலில் வல்வை ப்ளுசே வீரர்களான ஹஷான், கஜன்,வசீகரன் ஆகியோர் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
1991 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட வல்வை ப்ளூஸ் அணி, ஏழு வருடங்களுக்கு முன் champion கிண்ணத்தை வெற்றிகொண்டது குறிப்பிடத்தக்கது,, இரண்டாவது முறையாக வெற்றிகின்னத்தை கைப்பற்றுமா.! என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரியவரும்…
இந்த வருடம் புதிய சீருடைகளை வல்வையின் தொழிலதிபர் திரு ஜெயகாந்தன் ( hi-line cash & curry ) அவர்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது..