காபி அருந்துவதன் மூலம் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினை குறைத்துக் கொள்ள முடியும் என உலக புற்றுநோய் ஆய்வு நிதியம் தெரிவித்துள்ளது.
அத்துடன் முறையான உணவு பழக்க முறைகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதை தவிர்த்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு முதல் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானிய பெண்களுக்கு மேற்கொண்ட ஆய்வில் முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சிகளினால் 57 வீதமான பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினை குறைத்துக் கொள்ள முடிந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.