கிராக் செய்ய முடியாது இணைய வலையமைப்பை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

கிராக் செய்ய முடியாது இணைய வலையமைப்பை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படும் இணைய சேவையில் தற்போது பல குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
இதனால் தகவல்களை திருடுதல், அநாவசியமான தகவல்களை அனுமதி இன்றி பதிவேற்றம் செய்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதனைத் தடுப்பதற்காக கிராக் (Crack) செய்ய முடியாத இணைய வலையமைப்பு ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் Toshiba’s Cambridge Research Laboratory விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

இதற்காக விலையுயர்ந்ததும், சிக்கல் தன்மை வாய்ந்துமான தகவல் பரிமாற்றி மற்றும் உணரி ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவை போட்டோன் துணிக்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக கடத்துவதன் ஊடாக தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளுகின்றன.


Leave a Reply

Your email address will not be published.