காரைநகர்சென்றசிவாஜிலிங்கத்தைஇராணுவத்தினர்தடுத்துவைத்தனர்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்காகக் காரைநகருக்கு நேற்று மாலை சென்றுள்ளார். இதன்போது காரைநகர் வலந்தலைச் சந்தியில் அவரது வாகனத்தை மறித்த இராணுவத்தினர், சுவரொட்டிகளை ஒட்டுவதாகக் குற்றம் சாட்டி அவரை தடுத்து வைத்திருந்தனர் சுமார் இரண்டு மணி நேரம் இராணுவக் காவலில் வைக்கப்பட்டிருந்த சிவாஜிலிங்கம் பின்னர் விடுவிக்கப்பட்டார்.