மக்களின் ஆணை கிடைத்தால் இராணுவத்தை வெளியேற்றுவோம்! யாழினில் சூளுரைத்தார் விக்னேஸ்வரன்!

மக்களின் ஆணை கிடைத்தால் இராணுவத்தை வெளியேற்றுவோம்! யாழினில் சூளுரைத்தார் விக்னேஸ்வரன்!

எங்களின் மக்களுக்கு தேவையில்லாத இராணுவம் எம்மவர்களை அடக்கியாள இங்கு இருக்க முடியாது. மக்கள் ஆணை கிடைத்தால், நாங்கள் அவர்களை வெளியேற்றுவோம் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் க.வி.விக்னேஸ்வரன், அதிகாரங்கள் வழங்க மறுத்தால் மீண்டும் ஆயுதம் ஏந்தக் கூடிய நிலைமையும் வரலாம் என்றும் கூறினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுக் காலை நடத்தப் பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மாகாண சபைச்சட்டங்களின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். இவ்வாறு வழங்காமல் விடுவது என்பது சட்டத்துக்கு புறம்பானது.

நாம் சர்வதேசத்திடம் இதனைத் தெரிவிப்போம். இந்த அரசு 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்கவில்லை என்பதனைத் தெரிவிப்போம். ஆளும் வர்க்கத்தின் இத்தனைய கெடுபிடிகளால் தான் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இனியும் இப்படிச் செய்தால் மீளவும் ஆயுதம் ஏந்த வேண்டிய ஒரு நிலைமை ஏற்படலாம்.

இராணுவம் போர் முடிந்த பின்னர் இந்தப் பகுதியில் 4 வருடங்களாக இருப்பதற்கான காரணம் காட்ட வேண்டும். காரணமில்லாமல் வைத்திருக்கின்றார்கள் என்றால், அடிமையாக்கி,எங்களை கால்களில் நசுக்கி வைத்திருக்கின்றார்கள் என்று அர்த்தம். இராணுவத்தை இங்கிருந்து வெளியேற்றும் சகல உரித்துகளும் மக்களுக உண்டு. எங்களுக்குத் தேவையில்லாத இராணுவம் எங்களை அடக்கியாள இங்கே இருக்க முடியாது. மக்கள் ஆணையைப் பெற்று அவர்களை வெளியேற்றுவோம். அரசு ஒத்துழைக்க மறுத்தால் ஐ.நா. வரையிலும் செல்வோம் என்றார்

Leave a Reply

Your email address will not be published.