அமெரிக்காவில் உள்ள சிங்களவர்கள் அனைவரும் அமெரிக்காவை புறக்கணித்து நாடு திரும்புகின்றார்கள்!?
செய்தி: அமெரிக்காவுக்கு எதிராக சிங்கள வெறியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அதிபர் ராஜபக்சேயின் ஆதரவும் உண்டு. அதில் கலந்து கொண்டவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. அதில், அமெரிக்காவின் உற்பத்தி பொருட்களான கோக கோலா, கோதுமை உள்ளிட்டவற்றை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக அமெரிக்காவில் உள்ள சிங்களவர்கள் அனைவரும் அமெரிக்கவை புறக்கணித்து அமெரிக்கவை விட்டு வெளியேறுங்கள் என இராஜபக்ச அறிவித்தாலும் அறிவிக்கலாம். அவ்வளவு முட்டாளா இந்த இராஜபக்ச என கேள்வி கேட்கலாம், ஏற்கனவே பொருளாதாரத்தில் தல்லாடும் இலங்கை பெரும் வர்த்தக நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்கச் செய்வது பொருளாதாரத்தை மேலும் சிக்கலுக்குள்ளாக்கு என்பது இலகுவாக அனைவருக்கும் தெரியும். அதைக்கூட புரிந்துகொள்ளாமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்த ஆதரவு வழங்கி அமெரிக்காவை மிரட்டிப் பார்க்கும் மகிந்த ஒரு முட்டாள்தானே.
நாம் சில காலம் முன்பு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம், அதாவது எவர் எவர் தமிழ் இன அழிப்பிற்கு உதவிகள் செய்தார்களோ அவர்களாலேயே மகிந்த அழிவார் என தெரிவித்திருந்தோம். மகிந்த பல நாட்டு தலைவர்களுடன் கைகுலுக்கும் காட்சிகள், வாய் கிழிய சிரிக்கும் காட்சிகள் என படம் படமாக வெளியிட்டு சிங்கள பத்திரிக்கைகள் சிங்கள மக்களை ஏமாற்றி வந்தன. அதாவது அப்படமூடாக உலக தலைவர்களின் ஆதரவு இவருக்கு இருப்பதாகவும். போரை வெற்றிகரமாக நடாத்தியதற்கு பாராட்டு தெரிவித்ததாகவும் அப்படங்களுடன் செய்திகள் வெளியிட்டன. ஆனால் கடாபி, கிட்லர்,முசோலினி, [சதாம் உசைன்] போன்றவர்கள் உலக தலைவர்களுடன் கைகுலுக்கி பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்தவர்கள்தான் , அவர்களை அழித்தொழிக்கவும் முக்கிய காரமாகவிருந்தவர்களும் அதே உலக தலைவர்கள்தான் என்பது வரலாறு.