புலனாய்வுப் பிரிவினர் மக்களை பயமுறுத்துவதாக சிவசக்த்தி ஆனந்தன் குற்றச்சாட்டு
வட மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்றால் குண்டு வெடிப்பகள் நடக்கும் அதனையடுத்து இராணுவத்தினா் வீதியால் செல்லும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவா்கள் என இராணுவத்தினா் எச்சரிக்கை விடுப்பதாக தமிழத்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இரகசிய பொலிஸார் இவ்வாறு மக்களிடம் கூறுவதாகவும் தமிழத் தேசிய கூட்டமைப்பின் வாக்களிப்பு வீதத்தை குறைக்கும் நோக்கிலும் படையினா் அவ்வாறு செயற்படுவதாகவும் அவா் குற்றம் சுமத்தினார். இரகசிய பொலிஸார் அவ்வாறு எச்சரிக்கை விடுவதால் மக்கள் வாக்களிக்கச் செல்வதற்கு அச்சமடைவதாகவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் குறிப்பிட்டார்.