மண்ணையும் மக்களையும் மீட்க! பெல்ஜியம் நோக்கிய மிதியுந்துப் பயணம்! இளையோர்களுக்கு அழைப்பு!

ஜெனீவாவிலிருந்து பெல்ஜியம் வரையிலான மிதியுந்துப் பயணம் நேற்றைய நாள் ‘எர்டெய்சன்’ என்னும் இடத்திலிருந்து தொடங்கி ‘பெகர்சைம், இல்கிறீச், சூபிள்வேசைம், கொனைம், பிசைம்’ ஆகிய நகரங்களைக் கடந்து ‘சிற்றிக்கைம்’ நகரை வந்தடைந்துள்ளது.

இவர்கள் தாங்கள் கடந்து வந்த நகரங்களிலுள்ள நகர முதல்வர்களைச் சந்தித்து தமிழர்களின் நிலையை எடுத்துச் சொல்லியிருந்தனர்.

மேலும் 54 கிலோமீற்றர்களைக் கடந்து வந்த இவர்களை ‘சிற்றிக்கைம்’ நகரமுதல்வரும் அந்நகரில் வாழும் தமிழ் மக்களும் வரேவற்றுக் கொண்டதுடன், தமிழ் மக்கள் தமக்கென ஒரு அரசை அமைத்து வாழ்வதற்கு தன்னாலான உதவிகளைச் செய்வதாக நகரமுதல்வர் கூறியுள்ளார்.

அத்தோடு நேற்றைய நாள் (22.09.2013) இவர்களை ஸ்ரார்ஸ்பூர்க் வாழ் தமிழ்மக்கள் 14.00 மணியிலிருந்து 16.00 மணிவரை ‘place kleber’ என்னும் இடத்தில் வரவேற்கக் காத்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 30.09.2013 திங்கட்கிழமை அன்று பெல்ஜியம் புரூசலில் நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் கலந்து கொள்ள அனைத்து தமிழ் உறவுகளையும் அழைப்பதுடன் குறிப்பாக இளையோர்களை இப் பேரணியில் கலந்து கொள்ள அழைப்பதோடு, புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் எமது பேராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ள மாந்தநேயச் செயற்பாட்டாளர்கள் அழைக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published.