“முஸ்லீம் பிரதிநிதிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்பட்டமை TNAயின் முன் உதாரணம்”
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனக்கு கிடைத்த போனஸ் ஆசனத்தில் ஒன்றை முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கு வழங்க முன் வந்துள்ளமை பாராட்டுக்குரியது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் தேர்தல் காலத்தில் பெரிய கட்சி சிறிய கட்சிகளுடன் செய்து கொள்ளும் உடன்பாட்டினை நிறைவேற்ற வேண்டும் என்ற முன்மாதிரைியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காண்பித்துள்ளது.
“தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை முஸ்லிம் ஒருவருக்கு வழங்க முன்வந்தததை நான் வரவேற்கின்றேன். குறிப்பாக தேர்தல் காலத்தில் பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளுடன் செய்து கொள்ளும் உடன்படிக்கைகளை அவற்றை நிறைவேற்றுவதில்லை “
“எமது கட்சியும் ஆரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்பாடுகள் எவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை”
இவ்வாறான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துடன் செய்து கொண்ட உடன் படிக்கையின் பிரகாரம் ஒரு போனஸ் ஆசனத்தை வழங்கியதன் மூலம் தானது உறுதிமொழியை காப்பாற்றியுள்ளது. இது பெரிய கட்சிகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் பாடமாகவும் உள்ளது.
அத்துடன் பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதன் மூலம் சிறிய கட்சிகள் மேல் மக்கள் நம்பிக்கை வைப்பர். இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிமொழியை நிறைவேற்றி தமிழ் மக்களின் பாரம்பரியத்தை காப்பாற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது.
என தெரிவித்தார்.