வட மாகாணசபையின் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெறுகிறது.
வடமாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வசிப்பிடத்திலேயே இந்த சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது. வட மாகாணசபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனும் சென்றுள்ளார். மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் அவர்களின் கையொப்பங்கள் அவர்களின் ஆதரவு குறித்து உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடவே அவர் ஆளுநரை சந்திப்பதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.