வெளிநாட்டுக் கணவர் பார்க்க! கணணி முன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை

கிருஷ்நப்பிள்ளை நிர்மலா என்ற இருபத்தைந்து வயதுடைய ஒருபெண் குழந்தையின் தாய் ,கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரான சத்தியசீலன் சீவரத்தினம் என்பவரோடு இன்று SKYPEயில் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் வீட்டு வளையில் தூக்கிட்டு மரணிக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு கணவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வளையில் நைலோன் கையிறை இட்டுவிட்டு கணணியை OFF செய்துவிட்டு கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

உடனடியாக இவரின் உறவினர்களுக்கு விடயத்தை கட்டாரிலிருந்து தொலைபேசி மூலம் அறிவித்தவுடன் ,உறவினர்கள் மிகவும் அவசரமாக இவரின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டுவளையில்தூக்கிட்டு மரணித்திருப்பதை அவதானித்துள்ளனர். ஏறாவூர் பொலிசார் இன்று மாலை பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் அவர்களோடு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்து,பிரேதப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர். கட்டாரில் இப்பெண்ணின் கணவரோடு மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தொடர்பை ஏற்படுத்திய போது இதனை உறுதிப்படுத்தினார்.

நாளை பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.arvuirarvuir1arvuir2arvuir3arvuir4

Leave a Reply

Your email address will not be published.